அதிகரித்துள்ளது

இதன் காரணமாக, மூன்று ஆண்டுகளில், எலக்ட்ரானிக் பொருட்கள் உற்பத்தி, குறிப்பி­டத்தக்க வகையில் அதிகரித்து உள்ளது.
இது குறித்து, மத்திய மின்னணு மற்றும் தக­வல் தொழில்நுட்ப துறை அமைச்சர், கே.ஜே.அல்போன்ஸ், ராஜ்யசபாவில் கூறிய­தாவது:தேசிய மின்னணு கொள்கையால், உள்நாட்டில் எலக்ட்ரானிக் சாதனங்கள் தயா­ரிப்பு அதிகரித்து உள்ளது. ‘ஆப்பிள், சாம்சங், நோக்கியா, எல்.ஜி., எச்.டி.சி., லாவா, இன்­டெக்ஸ்’ உள்ளிட்ட மொபைல் போன் தயாரிப்பு நிறுவனங்கள், இங்கு தொழிற்சாலைகளை அமைத்து உள்ளன.
கணினி மற்றும் அது சார்ந்த உபகரணங்கள் தயாரிப்பில், ‘எச்.பி., லெனோவா, டெல், சிஸ்கோ’ உட்பட, பல நிறுவனங்கள் ஈடுபட்டு உள்ளன.இதன் காரணமாக, உள்நாட்டில், எலக்ட்ரா­னிக் பொருட்களுக்கான தேவையை சமா­ளிக்க முடியாமல் இருந்த நிலை மாறி வரு­கிறது. எலக்ட்ரானிக் பொருட்கள் உற்பத்தி அதிகரிப்பால், இது சாத்தியமாகியுள்ளது.
கடந்த, 2013 -– 14ம் நிதியாண்டில், உள்நாட்டு எலக்ட்ரானிக் பொருட்களின் உற்பத்தி, மதிப்பு அடிப்படையில், 1.80 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. இது, 2016- – 17ல், 3.17 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இந்த மூன்று ஆண்­டுகளில், எலக்ட்ரானிக் பொருட்கள் உற்பத்தி வளர்ச்சி, முறையே, 5.49 சதவீதம்; 27.79 சதவீதம் மற்றும், 30.45 சதவீதமாக அதிகரித்துள்ளது.
உள்நாட்டில் எலக்ட்ரானிக் பொருட்கள் உற்பத்தி அதிகரித்த காரணத்தால், அவற்றின் இறக்கு­மதி வளர்ச்சி விகிதம் குறைந்துள்ளது.மதிப்­பீட்டு ஆண்டுகளில், எலக்ட்ரானிக் பொருட்கள் இறக்குமதி வளர்ச்சி, 12.94 சதவீதம்; 9.06 சதவீதம் மற்றும் 4.74 சதவீதம் என்ற வகையில் குறைந்­துள்ளது.


Postingan terkait: